திருச்சியில் நூலகத்திற்கென்றே 47 வருட அடையாளம் கார்முகில் புத்தக நிலையம்

திருச்சியில் நூலகத்திற்கென்றே 47 வருட அடையாளம் கார்முகில் புத்தக நிலையம்

ஆலயம் இல்லாத ஊரில் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரிலும் குடியிருக்க கூடாது. நூலகங்கள் நம் அறிவின் மிகப் பெரிய தேடல் வெளி. நல்ல நிலத்தில் பயிர்கள் செழித்து வளர்வது போல நல்ல நல்ல நூல்களை நாம் தேடிப்படிக்கும் போது நம் மனம் வளம் பெறும். தனி மனம் வளம் பெறும் போது சமூகம் வளம் பெறும். தியானத்திற்கு ஈடானது நூல் வாசிப்பு. நீரின்றி அமையாது உலகு. நல்நூல்கள் இன்றி அமையாது அறிவார்ந்த உலகு. இதை உருவாக்குவதில் நூலகங்களின் பங்கு மகத்தானது. ஆறு இல்லாத ஊர் மட்டுமல்ல நூலகம் இல்லாத ஊரும் பாழானதே. நூலகங்களில் கம்பீரமாக காட்சி தரும் நூல்கள் வரிசையில் பகவத்கீதை பக்கத்தில் பைபிள் இருக்கும். பைபிளை ஒட்டியே திருக்குரானும் இருக்கும். புத்தமும் சமணமும் ஒரே பாகத்தில் அடங்கி இருக்கும். நூலகத்திற்குள் ஜாதி இருக்காது, மதம் இருக்காது. 

அமைதியான சூழ்நிலையில் அவரவர் தேடல் தீவிரமாக இருக்கும். இங்கே இருந்து தான் உன்னதமான சமூக கட்டமைப்பின் மையப்புள்ளி உருவாக்கப்படுகிறது. திருச்சியில் பல வரலாறு  நிறைந்த இடங்களில்   வாசிப்பின் மீது பற்றுக் கொண்டவர்கள் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திருச்சி கார்முகில் வாடகை புத்தக நிலையம் தான். 1974 முதல் இயங்கி வரும் கார்முகில் வாடகை புத்தக நிலையத்தின் தனிசிறப்பு தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய தனியார் நூலகம் என்பது. இளம் வயது முதல் நாடகத்தின் மீது கொண்ட பற்றுதலால் நாடக கலைஞராக பணிபுரிந்ததோடு இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் திருச்சியில் 1974ஆம் ஆண்டு முத்துவேலலகன் வாடகை புத்தக நிலையத்தை தொடங்கினார். அனைத்து வகையான நூல்களும் பல மொழி நூல்களும்  இங்கு கிடைக்கும் என்பதே இதற்கான தனி சிறப்பு.

மாதத்திற்கு ரூ 2.50 கொடுத்து எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம் என்று தொடங்கி இன்றைக்கு நூறு ரூபாய் மாத சந்தா பெறப்படுகிறது. இந்நூலகத்தின் மூவாயிரத்திற்கும், மேற்பட்ட நிரந்தர உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கில் தினசரி வாசிப்பாளர் நூலகத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கார்முகில் நூலகத்திற்கு என்று வாசகர் பட்டாலும் பரந்து விரிந்து இருக்கின்றனர். நூலகத்தின் உரிமையாளரான கார்முகில், தன்னுடைய இத்தனை ஆண்டு கால பயணத்தை குறித்த பார்த்துக் கொள்ளும். போது, என் தந்தை முத்துவேலழகன் இப்பொழுது நான் என் மகன் என்று மூன்று தலைமுறைகளாக இந்த நூலகத்தை நடத்திவருகிறோம்.

இந்த நூலகம் என்பது திருச்சிக்கு என்று தனி அடையாளத்தோடு எங்களுக்கான தனி அடையாளமும் தான். இந்த நூலகம் எங்கள் வாழ்க்கைக்கான அர்த்தம் மனநிறைவோடு இத்தனை ஆண்டு காலத்தில் எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது இந்நூலகம். எங்கள் நூலகத்திற்கான அடையாளமே எங்களை அடையாளம் தெரியாதவர்கள் எங்களின் முன்பே  எங்கள் நூலகத்தைப் பற்றி சொல்லும் பொழுது நூலகத்தால் அவர்கள் அடைந்த பயணும் இந்த நூலகத்தின் பயணும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதுபோன்ற உணர்வுபூர்வமான எத்தனையோ நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் இந்த நூலகம் எங்களுக்கு கொடுக்க தவறியதில்லை.

கொரோனா கால ஊரடங்கின் போது மக்கள் அவர்களுடைய அன்றாட தேவைகளுக்கு எவ்வாறு எல்லாவற்றையும் வாங்க நினைத்தார்களோ அதே போன்று எங்கள் வாசகர்களும் புத்தகங்களின் மீது கொண்ட காதலால் புத்தகங்களை தேடி வந்தபோது அடைந்த நெகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. புத்தக வாசிப்பாளர்கள் ஒருபோதும் புத்தகத்தை திருட நினைப்பதில்லை என்பதற்கு மிகப்பெரும் சான்று இந்த நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் எடுத்தாலும் அத்தனை புத்தகங்களையும் அவர்கள் திருப்பிக் கொண்டு வந்து விடுவார்கள். 

எங்கள் வாசகர்கள் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது அனுபவத்தை தந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார். திருச்சியில் உள்ள வாசகர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் திருச்சியின் அடையாளமாக கார்முகில் புத்தக நிலையம்  எப்போதும் தன்னுடைய தனித்துவத்தோடு இயங்கும். கார்முகில் புத்தக நிலையம் பலமொழி நூல்கள் வாசிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு நூல் களஞ்சியமே!!

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn