நிறைவடையும் தருவாயில் ஸ்ரீரங்கம் சர் சி.வி ராமன் ஸ்டெம் பூங்கா கட்டுமான பணிகள்- விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

நிறைவடையும் தருவாயில் ஸ்ரீரங்கம் சர் சி.வி ராமன் ஸ்டெம் பூங்கா கட்டுமான பணிகள்- விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரூபாய் 15 கோடியில் பிரமாண்டமாக தயாராகும் சர் சி.வி ராமன் ஸ்டெம் பூங்கா கட்டுமான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பூங்காக்கள், சாலைகள்,வணிக வளாகங்கள்,செயற்கை நீரூற்றுகள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் 12,500 சதுர மீட்டரில் பிரம்மாண்டமான அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பூங்கா அமைக்கும் பணி 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற திருச்சி திருவானைக்காவல் சேர்ந்த டாக்டர் சர் சி வி ராமன் பெயரில் ரூபாய் 14 கோடியே 90 லட்சம் செலவில் உருவாக்கப்படும் இந்த ஸ்டெம் பூங்கா வழக்கமான ஒரு பூங்காவாகவும் அருங்காட்சியமாக இல்லாமல் குழந்தைகள் தங்கள் சொந்த முயற்சியால் விளையாட்டுகளின் மூலம் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் குறித்த கருத்துக்களை அறிந்துகொண்டு மனதில் பதியும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இங்கு அமைக்கப்படும் கணிதம் தொடர்பான பூங்காவில் மாணவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் கணித மாதிரிகள்,விளையாட்டு வழி கண்காட்சிகள், முக்கோணவியல் பித்தாகரஸ் தேற்றம்,சைக்ளோடல் பாதை,கூம்பு பிரிவுகள்,  நிகழ்தகவு,சதுர சக்கர வளைவுகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இயற்பியல் பூங்காவில் வானியல் மற்றும் விண்ணுலக பொருள்கள் குறித்த கற்றலை எளிதாக்கும் வகையில் 360 டிகிரியில் டிஜிட்டல் கோளரங்கம் அமைக்கப்படுகிறது இந்த வித்தியாசமான அரங்கில் பல்வேறு வானியல் மற்றும் பயண தலைப்பு வீடியோக்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர குழந்தைகள் விளையாட ஊஞ்சல்,சறுக்கல்,சீசா விளையாட்டுடன் பெண்டுலம் செயல்பாடு, ஆற்றல் மாற்றம் புவியீர்ப்பு விசை, இசைக்கருவிகள் செயல்படும் முறை ,வாகனங்கள் செயல்படும் முறை என பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளுடன் விளையாட்டு வழிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு பகுதியையும் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 150 பார்வையாளர்கள் அமரும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன்ஆம்பி தியேட்டர், பூச்செடிகளுடன் கூடிய நடைபாதை சிற்பங்கள் பார்வையற்றோர்கான ரியாலிட்டி உதவி கனண்ணாடி  உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த பணிகளும் இந்த மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர் ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா சிறந்த சுற்றுலா தளமாக உள்ள நிலையில் தற்போது பஞ்சக்கரை  அமைக்கப்படும் இந்த சர்சிவி ராமன் பூங்கா உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களிடையேயும் குறிப்பாக மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO