"கோவிட் ஸ்டார்"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின் சார்பில் கௌரவிப்பு!!

"கோவிட் ஸ்டார்"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின் சார்பில் கௌரவிப்பு!!

திருச்சியில் கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு VDart நிறுவனத்தின் சார்பில் கௌரவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

Advertisement

கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு, பொருளாதார ரீதியாக பல இடர்பாடுகளை சந்திக்க வைத்தாலும் அதையும் எதிர்த்து பொதுமக்களுக்காக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக களத்தில் இன்று பல்வேறு உதவிகளை செய்த நல் உள்ளங்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்களே!

கடந்த 8 மாதங்களாக கொரோனா காலகட்டத்திலும் தங்களின் உயிரை துச்சமென நினைத்து களத்தில் நின்று பணியாற்றிய முன் களப்பணியாளர்களின் பணி என்பது வெறும் வாய் வார்த்தையால் சொல்லிவிட முடியாது.

Advertisement

அந்தவகையில் தொடர்ந்து இன்றளவும் பணியாற்றி வரும் திருச்சியின் முன்கள பணியாளர்கள் 12 பேருக்கு VDart நிறுவனத்தின் சார்பில் கேடயம் மற்றும் ரூபாய் 10,000த்திற்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் திருச்சி அரசு மருத்துவமனை, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 12 பேருக்கு ரூபாய் 1,20,000 காசோலை VDart நிறுவனத்தின் CSR பிரிவின் கீழ் வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்வில் VDart நிறுவனத்தின் மேலாளர் சங்கர நாராயணன் மற்றும் டெரிக் அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a