திருச்சி குழுமாயி அம்மன் கோவில் உண்டியலை எடுத்து சென்ற கொள்ளையர்கள் - போலீசார் விசாரணை
திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் கரையில் அமைந்துள்ளது குழுமாயி அம்மன் கோவில். இங்கு நடக்கும் குட்டிக்குடி திருவிழா என்பது திருச்சி முழுவதும் பிரமாண்டமான ஒரு திருவிழாவாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisement
கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்த குழுமாயி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்திகடன் செலுத்தி, கிடா வெட்டி பூஜை செய்து வருகின்றனர். திருச்சியின் ஒரு மையப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு இடமாக இருப்பதால் பலரும் இக்கோவிலுக்கு வருகை புரிந்து செல்வர்.
Advertisement
இந்த நிலையில் நேற்று கோவில் பூசாரி இரவு பூஜை முடித்து கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை கோவிலில் சென்று பார்த்தபோது கோவிலின் முன்புற கேட் உடைக்கப்பட்டு அங்கிருந்த காங்கிரிட் உண்டியலை அடியோடு பெயர்த்து சென்றது தெரியவந்தது.
Advertisement
உடனடியாக கோவில் பூசாரி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காங்கிரட் உண்டியல் கடப்பாரையால் பெயர்க்கப்பட்டு எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நான்கு நபர்கள் வருவதும் இரண்டு நபர்கள் கோவிலுக்குள் புகுவதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.