குடும்ப வறுமையால் 11 மாத குழந்தையுடன் துபாய் சென்ற தாய் கொரோனாவுக்கு பலி - துபாயில் தவித்த குழந்தை

குடும்ப வறுமையால் 11 மாத குழந்தையுடன் துபாய் சென்ற தாய் கொரோனாவுக்கு பலி - துபாயில் தவித்த குழந்தை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலவன் என்பவவருக்கும் பாரதிக்கும் 2008ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விக்னேஸ்வரன், அகிலன், தேவேஸ் என
மூன்று குழந்தைகள். விக்னேஸ்வரன் சிறுநீரக செயல் இழந்து மருத்துவ சிகிச்சை பலனின்றி பதிமூன்று வயதில் உயிரிழந்தார்.

அதற்காக தாய் பாரதி 2015 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வேலை செய்தார். மருத்துவ செலவிற்கு அதிகமாக பணம் தேவைப்பட்டதால் அங்கே பணிபுரிந்து பின்னர் 2017ஆம் ஆண்டு துபாயில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு சொந்த ஊர் கள்ளக்குறிச்சிக்கு வந்து சென்றால் கடந்த ஒரு வருடமாக கோவிட் தொற்றால் வறுமையால் குடும்பம் வாடியது.

மேலும் இருவரும் வேலையின்றி தவிர்த்ததால் மீண்டும் குடும்ப வறுமை போக்க கடந்த மே மாதம் துபாய்க்கு 11 மாத கைக்குழந்தை தேவேஸ்யுடன் வேலைக்கு சென்றார். துபாய் சென்ற சில நாட்களில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு அங்கேயே சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென உயிரிழந்தார். 

(29.5.2021)ஆம் தேதி உயிரிழந்த அவருடைய உடலை இங்கு அனுப்பி வைக்க முடியாது அங்கேயே இறுதி சடங்கு செய்து விடுகிறோம் என்று சொன்னதன் அடிப்படையில் அதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். கைக்குழந்தை கடந்த 29 ஆம் தேதிக்கு பிறகு அங்கு அவருடன் பணிபுரிபவர்களிடம் குழந்தை இருந்தது.

அந்த கைக்குழந்தை அங்கே தனியே தவித்தது. இந்த விஷயம் துபாய் நகர திமுக அமைப்பாளர் மீரானுக்கு தெரியவர தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று  முயற்சி எடுத்த நிலையில் 11 மாத கைக்குழந்தை திருவாரூரை சேர்ந்த சதீஷ்குமார் பாதுகாப்பாக திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வந்து திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த தந்தை வேலவனிடம் ஒப்படைத்தார்.

தன் மனைவியை இழந்து சோகம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தன் குழந்தை பாதுகாப்பாக மீண்டும் தன் கையில் குழந்தையை பெற்று கட்டித்தழுவி முத்தமிட்டு கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டர். மனைவி உடமைகளையும் பெற்று கொண்டு விமான நிலையத்தை விட்டு நடக்க துவங்கினார்.

குடும்ப வறுமை காரணமாக கைக்குழந்தையுடன் துபாய்க்கு சென்ற மனைவி மரணம் அடைந்த துக்கம் குழந்தை மட்டுமே கையில் கிடைத்தது மறுபுறம் ஆறுதலாக வேலவனுக்கு.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF