திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சாமி தரிசனம்!!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சாமி தரிசனம்!!

Advertisement

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதுமிருந்து பலர் வருகை புரிவர்.

Advertisement

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக டெல்லியிலிருந்து அமைச்சர்கள் பலரும் தமிழகத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் சாமி தரிசனம் செய்தார். அதற்கு முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.