ஓட்டு போட்டா 25% சலுகை விலையில் பிரியாணி நூதன விழிப்புணர்வு பரப்புரை
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடம் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விதமான பேரணிகள் ஊர்வலங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
திருச்சியில் ஏற்கனவே ஒரு கார் பழுது நீக்கும் நிறுவனம் சலுகையை அறிவித்தது. தற்போது திருச்சியில் உள்ள பிரபல பிரியாணி கடையான கே.எம்.எஸ் ஹக்கீமில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய நூதனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்களித்துவிட்டு வருபவர்களுக்கு கடையில் 25 சதவீதம் பிரியாணி சலுகை விலையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். மாநகர் முழுவதும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW