கூகூர் முதல் கிளிக்கூடு வரை தரைப்பாலம் - உத்தமர்சீலி பகுதியில் அதிமுக வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் வாக்குறுதி!!

கூகூர் முதல் கிளிக்கூடு வரை தரைப்பாலம் - உத்தமர்சீலி பகுதியில் அதிமுக வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் வாக்குறுதி!!

Advertisement

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அந்தநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடு, கவுத்தரசநல்லூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் லால்குடி கூகூர் முதல் கிளிக்கூடு வரை காவிரி கொள்ளிடக் கரையில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்றும், அதிமுக ஆட்சியில்தான் கிளிக்கூடு முதல் தஞ்சாவூர் வரை சாலை அமைத்து தரப்பட்டுள்ளது" என்றார்

அதனைத் தொடர்ந்து உத்தமர்சீலி பகுதிக்கு சென்று வீடு வீடாக இரட்டை இலைச் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.