திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு - வார்டு ஒதுக்கீட்டில் திமுக காங்கிரஸ் முட்டல்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு  - வார்டு ஒதுக்கீட்டில் திமுக காங்கிரஸ் முட்டல்
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. இதில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 15 வார்டுகள் ஒதுக்கி பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதாக திமுகவின் முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.எ.நேரு தெரிவித்தார் .
ஆனால் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் கூட்டணி பேச்சுவார்த்தையை விட்டு வெளியேறினர். மீண்டும் தொடர்ந்து  கூடுதலாக வார்டுகள் கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேருவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .அவர் நான்கு வார்டுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் என தெளிவாக என திருநாவுக்கரசரிடம் நேரு குறிப்பிட்டு விட்டார்.

 இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் கட்சி அலுவலகத்திறகு பூட்டு போட்டு சாவி எடுத்து சென்றனர் .பின்னர் மாவட்ட நிர்வாகிகள் அவர்களிடம் பேசி சாவி வாங்கி பூட்டை திறந்தனர். தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 சற்றுமுன் திமுக அவர்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக தகவலை வெளியிட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் 51 வார்டுகளில் வேட்பாளர் பட்டியலை திமுக நேற்றே வெளியிட்டு விட்டது
 இதுவரை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வார்டு ஒதுக்கீடு ஒப்பந்த கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திருச்சியில் திமுக காங்கிரஸ் இடையேயான வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டு உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.
 காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இதனால் திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி பொறுமையுடன் இருக்கவேண்டும் என்றும் இரவு நல்ல தகவல் சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தற்போது வரை திமுக காங்கிரஸ்  வார்டு பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn