மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய தாய் - வெற்றிகரமாக மாற்றிய அரசு மருத்துவர்கள்

மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய தாய் - வெற்றிகரமாக மாற்றிய அரசு மருத்துவர்கள்

திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.வி. மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் (07.12.2023) அன்று 20-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் உல்லியங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க நபருக்கு கால் வீக்கம் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்ததில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்யப்பட்டு வந்த நிலையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதனை அறிந்த அவரின் தாய் வயது 47. தன் மகன்மீது கொண்டுள்ள அளவு கடந்த பாசத்தினால் தன் மகனுக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்ததால் அவர்கள் இருவருக்கும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சட்டரீதியான ஒப்புதல் பெற்றபிறகு இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையானது இம்மருத்துவமனை முதல்வர் பேரா.மரு.D.நேரு வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட மருத்துவ குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையில் சிறுநீரக மருத்துவ குழு மரு.ஏ.கே.நூர் முகமது. MD.. மரு.எஸ்.கந்தசாமி, MD., DM., மரு.A.பிரகாஷ், MD, மரு.மைவிழிசெல்வி, MD., சிறுநீரக அறுவை சிகிச்சை குழு மருத்துவர் மரு.ஜெயபிரகாஷ் நாராயணன், MS., Mch., மரு.ரவி, MS.,Mch w.gmmgr, MS, Mch.. MS., Mch., MS., Mch., மரு.சந்தோஷ்குமார், MS., Mch., மற்றும் மயக்கவியல் மருத்துவ குழு மரு.சந்திரன், MD, மரு.பாலசுப்ரமணிய குகன், MD, மரு.ராஜராஜன், MD, செவிலியர் குழு R.ராஜராணி, M.மகாலட்சுமி, M.ஹரிஹரசுதன், C.இளஞ்செழியன் மற்றும் உதவியாளர் குழு ஆகியோர் FFGLIL அறுவை சிகிச்சை வெற்றிகரமான நடைபெற்றது.

அறுவை சிகிச்சையானது தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக செய்து முடிக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒருங்கிணைப்பாளர் பு.மாரிசெல்வம் உடனிருந்தார். அறுவை சிகிச்சைக்குப்பின் நோயாளி நலமுடன் உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision