சாரநாதன் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா
சாரநாதன் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "அடிவானத்திற்கு அப்பால்" ஒரு elite lecture கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், முன்னாள் இஸ்ரோ இயக்குனர் டாக்டர் எஸ்.பாண்டியன் சிறப்புரையாற்றினார். சந்திரயான் 1 மற்றும் 3 இல் இஸ்ரோ எவ்வாறு வெற்றிகரமாக ஏவப்பட்டது, சந்திரயான் 2 இல் இருந்து கற்றுக்கொண்ட பிழைகள் என்ன? செயற்கை நுண்ணறிவு மென்மையான தரையிறக்கத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் தனது விரிவுரையில் விளக்கினார்.
ஆதித்யா 1 பற்றியும் விளக்கினார். உலகளாவிய சவாலான விண்வெளியில் குப்பைகளை சேகரிப்பதில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவித்தார். தொடக்கத்தில் டாக்டர் டி வளவன் Principal வரவேற்றார், பேராசிரியர் ஆர்.நடராஜன் R and D head நன்றியுரை வழங்கினார்.இவ்விழாவில் 720 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision