ஆதார் பதிவு, அஞ்சலக சேமிப்பு மற்றும் வங்கி கணக்கு மாணவ மாணவிகள் பெறுவதற்கான முகாம் தொடக்கம்

ஆதார் பதிவு, அஞ்சலக சேமிப்பு மற்றும் வங்கி கணக்கு மாணவ மாணவிகள் பெறுவதற்கான முகாம் தொடக்கம்

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே, தங்களுக்கான ஆதார் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணியினையும், வங்கி கணக்கு, அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான பணியினையும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகளில் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டு தொடங்கியது. பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மலர் தூவி மங்கல திலகமிட்டு வரவேற்றனர்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் துரைராஜ் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பாடநூல்களை வழங்கி வாழ்த்தினார். பள்ளியிலேயே ஆதார் வழங்கும் தமிழக அரசினுடைய சிறப்பு திட்டத்தினை அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு தொடங்கி வைத்தார். 

ஆதார் முகாமில் முதல் வகுப்பு சேர்ந்த அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ஆதார் முகாம் பள்ளியில் இருப்பதனால் தங்களது வேலை பாதிக்காமல் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். 

இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் இலஞ்சேட் சென்னி வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் டெல்சிட்டா மேரி ஆசிரிய பயிற்றுநர்கள் ஜாக்லின், ஜெயசுதா, பத்மாவதி, வாணிஸ்ரீ கல்வியாளர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினர். சிவக்குமார் கல்வியாளர் மருதநாயகம் அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மீனா வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

ஆதார் கருவி இயக்குனர் கனிமொழி, இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் ஆதார் எடுத்தனர். அனுராதா நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சத்துணவு ஊழியர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision