எம்எல்ஏ இல்ல திருமண விழா - கொடி கம்பம் வாகனம் மீது லாரி மோதி விபத்து
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முனைவர் சீனிவாசன் பேத்தியும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினரின் மகளின் திருமணம் வெகு விமர்சையாக மாபெரும் மாநாடு போல் நடைபெற்றது .
திருமண விழாவிற்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இரு புறங்களிலும் திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. திருமணம் முடிந்த நிலையில் கொடிகளை அகற்றுவதற்காக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி வாகன மூலம் கொடிக்கம்பங்களை எந்தவித தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி டாட்டா ஏசி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்திலிருந்து கம்பிகள் சாலையின் நடுவே கொட்டி சிதறியது.
இதில் டாட்டா ஏசி வாகனமும் தலை குப்பிற கவிழ்ந்தது. இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் எவ்வளவு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும், அரசியல் பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் இதுபோல் உத்தரவுகளை மதிக்காமல் பிளக்ஸ் பேனர், கொடிகள் பாதுகாப்பில்லாமல் சாலையில் அமைப்பது என்பது வழக்கமாகவே உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் இது போல் பணிகள் நடைபெறும் பொழுது ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளை வைத்து பணி செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா பணிகளில் இது போன்ற எந்தவித பாதுகாப்பு அரனும் இல்லாமல் பணி செய்ததே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision