புதிய கல்வி கொள்கை மூலம் வளர்ச்சிக்கான புதிய பாதையை உருவாக்கும் - திருச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

புதிய கல்வி கொள்கை மூலம் வளர்ச்சிக்கான புதிய பாதையை உருவாக்கும் - திருச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

திருச்சி இருங்களூரில் எஸ்.ஆர்.எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு... முதன் முதலில் இந்தியா சார்பாக ஒலிம்பிக் தேர்வு பெற்ற இளைஞர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இந்தியாவின் உயர் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

உயர்கல்வியில் திறமையான இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி உயரும். ஒவ்வொரு தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க முற்படவேண்டும். புதிய கல்வி கொள்கை மூலம் வளர்ச்சிக்கான புதிய பாதையை உருவாக்கும் என குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஆண்டில் 1.5 கோடி பொறியாளர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியே வருகின்றனர்.

அதில் 7 சதவீதம் பேர் மட்டுமே திறன்மிக்க இளைஞர்களாக வேலைவாய்ப்பிற்க்கு தகுதி பெறுகின்றனர். அமெரிக்காவில் நூற்றுக்கு 75% பாஸ்மார்க் என்பது உள்ளது. ஆனால் இங்கே வெறும் தேர்வுகளில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக இல்லாமல் கல்வியில் திறன் மிக்கவர்களாக தங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். உயர்கல்வியில் நல்ல இளைஞர்களை உருவாக்குவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழக குழுமத்தின் வேந்தரும், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான பாரிவேந்தர் பேசுகையில்.... எஸ் ஆர் எம் கல்வி நிறுவனங்களில் 75 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். பல்கலைக்கழகத்தில் 53 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 50 ஆண்டுக்கு மேலாக கல்வி சேவை ஆற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தைப் பொறுத்த அளவு கல்வி கலாச்சாரம் என அனைத்து நாடுகளிலும் உயர்ந்து நிற்பதாகவும் குறிப்பிட்டார். 

திருச்சி இருங்களளூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் 150 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் மூலம் 8,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவதாகவும் பெருமைப்பட தெரிவித்தார். தொடர்ந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் கல்வி மட்டுமல்ல அறிவியல் ஆராய்ச்சி இது போன்ற நிலையிலும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் சென்னை கவர்னர் மாளிகையில் இருந்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இணையதளம் மூலம் கலந்து கொண்டனர் திருச்சி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் எஸ்ஆர்எம் குழும ராமாவரம் மற்றும் திருச்சி வளாக தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக பல்கலைக்கழக தலைவர் நிரஞ்சன் வரவேற்புரையாற்றினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn