மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்.

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனோ நோயை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு 
முகாம்கள் மூலம் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 
தமிழகமெங்கும் 12.09.2021 அன்று மாபெரும் கொரோனோ தடுப்பூசி முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 12.09.2021 அன்று 
மாபெரும் கொரோனோ தடுப்பூசி முகாம்கள் நடத்துவது தொடர்பாக திட்டமிடுதல் மற்றும் தொடர்புடைய பல்வேறு துறைகள் இடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் இன்று(09.09.2021) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் சுமார் 650 தடுப்பூசி முகாம்கள் நடத்தி 137500 மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ஊரகப் பகுதிகளில் வட்டாரம் வாரியாகவும், நகர்ப்புற பகுதிகளில் கோட்டம் வாரியாகவும் முகாம்கள் நடைபெறுவதற்கான இடங்கள் நேர்ந்தெடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது· மாவட்ட ஆட்சியர் இந்த மாபெரும் கொரோனோ தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்திட சுகாதாரத் துறையினருடன் இணைந்து வருவாய் துறை, உள்ளாட்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மகளிர் திட்டம் பணியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் செயல்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.

மக்களின் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக அதிகப்படியான இடங்களில் முகாம்களை நடத்திடவும் மற்றும் தொலைக்கோடியான 
பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறுமாறும் முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தினார். மேலும் இந்தக் கூட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்களுக்கு தடுப்பூசிகளை சேர்த்தல் கொண்டு போய்ச் சேர்த்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் இணையத்தில் உடனுக்குடன் பதிவேற்றுவதற்கான பயிற்சி பெற்ற விவரங்களை பணியாளர்களை முகாம்களில் அமர்த்துதல், அதற்கு தேவையான தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் பற்றி மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார்.

மாவட்டத்தில் வட்டார அளவில் அனைத்துத் தரப்பினரும் உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைத்து பொது மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்தி, கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்திடும் இந்த முகாமினை வெற்றிகரமாக நடத்திட கேட்டுக் கொண்டார் பொது மக்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டு கொரோனோ நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn