திருவிழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவிழாவில் பங்கேற்க அனுமதி கேட்டு அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் லிங்கப்பட்டி கிராம மக்கள் வருடந்தோறும் பங்குனி மாதம் பிடாரப்பட்டியில் உள்ள வேலான்மலை மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பதவிக்கு இருத்தரப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் நிகழாண்டு லிங்கப்பட்டி கிராம மக்கள் பிடாரப்பட்டி மலையாண்டி கோயிலில் ஊர் முறைப்படி வழிபாடு நடத்த இந்து அறநிலையத்துறையினர் முறையான அனுமதி வழங்கவில்லை என்றும், விசாரணை நடத்த அளிக்கப்பட்டிருந்த நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த லிங்கப்பட்டி கிராம மக்கள் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வலியுறுத்தி   துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அலுவகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரிடம் கைப்பேசியில் பேசியதில்,

நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அறங்காவலராக லிங்கம்பட்டி தரப்பில் வழிபாடு செய்ய அனுமதிக்க இயலாது என்றும், ஊர்மக்கள் தனிநபர்களாக ஆலயம் சென்று வழிபாடு செய்ய ஆட்சேபனை இல்லை என்பதை தெரிவித்ததையடுத்து லிங்கம்பட்டி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn