பால்பண்ணை முதல் டோல்பிளாசா வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்குகள் சரி செய்ய களஆய்வு-திருச்சி எம்பி

பால்பண்ணை முதல் டோல்பிளாசா வரை உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்குகள் சரி செய்ய களஆய்வு-திருச்சி எம்பி

எனது திருச்சி தொகுதியில், பால்பண்ணை முதல் டோல் பிளாசா வரை உள்ள தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விளக்குகள் சரிவர எரிவதில்லை, அதனால் தொடர் விபத்துகள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, 

தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) மண்டல அலுவலருக்கு கடந்த வாரம் கோரிக்கை வைத்தேன். அது குறித்து தஞ்சையில் உள்ள NHAI திட்ட இயக்குனரிடம் தகவல் கொடுத்தேன்.

அப்போது, மேற்குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இல்லாத அனைத்து இடங்களிலும் புதிய சாலை விளக்குகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், பழைய சாலை விளக்குகளை பழுது நீக்கிட ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று (19.05.2025) மாலை 7:30 மணியளவில், அப்பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளச்செய்தேன். 

திமுக மாநகர செயலாளரும் மாமன்ற மண்டலக் குழு தலைவருமான மு. மதிவானன், தேசிய நெடுஞ்சாலைத்துறை பொது மேலாளர் (தொழில் நுட்பம்) மற்றும் திட்ட இயக்குநர் திரு செல்வகுமார் மற்றும் பால்பண்ணை சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆய்வில் பங்கேற்றனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision