முன் களப்பணியாளர்களாக அறிவித்து உதவித்தொகை வழங்கிட கோரி சிலிண்டர் டெலிவரிமேன்கள் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்பாட்டம்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இக்காலகட்டத்தில் வீடுகள் தோறும் சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் சிலிண்டர் டெலிவரிமேன்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
அவர்களுக்கு கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கிடவும், அரசு சம்பளம் நிர்ணயம் செய்து வழங்கட கோரி இன்று தமிழ்நாடு சிலிண்டர் டெலிவரிமேன் தொழிலாளர் சங்கம் சார்பில் சிலிண்டர் டெலிவரிமேன்கள் 100க்கும் மேற்பட்டோர் சிலிண்டர்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேரணியாகச் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சங்கத்தின் சார்பில் 10ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.
கொரோனா காலத்தில் பெட்ரோல் பம்ப் மற்றும் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் அரசுக்கு 25 சதவீதம் வருவாய் ஈட்டித்தருவதாகவும், ஆனால் சம்பளம் வழங்கப்படாத பட்சத்தில் மத்திய அரசு சம்பளம் நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும், வீடுகளுக்குச் சென்று சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரிமேன்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும்,
பலர் உயிரிழந்துள்ள நிலையில் கருணை அடிப்படையில் நிதி வழங்கிட வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் சிலிண்டர் டெலிவரிமேன்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC