ஸ்ரீரங்கம் கோயில் குதிரை இறந்தது
ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் காலையில் நடைபெறும் முதல் பூஜையான விஸ்வரூப சேவையின் போது யானை, காராம் பசு, குதிரை மற்றும் மங்கள பொருட்கள் இடம்பெறுவது வழக்கம். இதற்கென இக்கோவிலில் யானை, பசு மற்றும் குதிரை ஆகியவை பராமரிக்கப்படுகின்றன.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஹரி என்ற குதிரை 20 ஆண்டுகளுக்கு மேலாக கைங்கரியம் செய்து வந்தது. 2015க்கு பிறகு உடல்நிலை சரியில்லாததால் கோவில் கொட்டாரத்திலேயே பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவிலில் பராமரிக்கப்பட்ட ஹரி என்ற குதிரை சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று ஸ்ரீரங்கம் கோவில் கொட்டாரத்தில் உள்ளே இறந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision