பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நீச்சல் பயிற்சி - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்க கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு தகுதிவாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பொதுமக்கள், பள்ளி / கல்லூரி மாணவ மாணவியர்கள், மற்றும் நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி (Learn to Swim) கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.
முதல் கட்டம் : 01.04.2024 முதல் 12.04.2024 வரை
இரண்டாம் கட்டம் : (14.04.2024) முதல் (25.04.2024) வரை
மூன்றாம் கட்டம் : (27.04.2024) முதல் (08.05.2024) வரை
நான்காம் கட்டம் : (10.05.2024) முதல் (21.05.2024) வரை
ஐந்தாம் கட்டம் : (23.05.2024) முதல் (03.06.2024) வரை
ஆகிய நாட்களில் காலை 6:30 மணி முதல் 9:30 மணிவரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும், மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சிக்கான கட்டணம் ரூ.1500/- GST 18% (ஒரு நபருக்கு / ஒரு மணி நேரம்) POS Machine-G-Pay or ATM Card வாயிலாக செலுத்தப்பட வேண்டும்.
வயதிற்கு மேற்பட்டவர்கள் நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ளலாம் (வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்). நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள்/ ஆண்கள் மற்றும் மாணவியர்கள் / பெண்கள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 9:30 மணி முதல் 12:30 வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஆண்களுக்கும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பெண்களுக்கும் தினசரி கூப்பன் முறையில் வழக்கம் போல் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.50/-+ GST 18% (ஒரு நபருக்கு / ஒரு மணி நேரம் மட்டும்)
மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும் 0431-2420685 என்ற தொலைபேரி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision