சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி ஹலோ எப்எம் நடத்தும் யோகா போட்டி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி ஹலோ எப்எம் நடத்தும் யோகா போட்டி

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றதை தொடர்ந்து முதல் முறையாக 2015 , ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்த யோகா தினத்தை கொண்டாடும் விதமாக திருச்சி ஹலோ எப்எம்-இல் யோகா தினத்தை சிறப்பிக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு வரும் திங்களன்று ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் இரண்டு மணி நேரத்திற்கு இடையில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் செய்ய வேண்டிய யோகா பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் மக்களோடு பகிர்ந்துக்கொள்ள இருக்கின்றனர்.

இந்த யோகாவை மக்களிடம் கொண்டு செல்லும் அடுத்த முயற்சியாக மக்களுக்கான ஒரு போட்டியே ஹலோ எஃப்எம் அறிவித்துள்ளது. திருச்சி  மக்கள் யோகாசனத்தை காணொளியாக இரண்டு நிமிடத்திற்கு பதிவு செய்து திருச்சி ஹலோ எப்எம் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பப்படும் அந்த காணொளி காட்சி பதிவில் எந்த யோகாசனத்தை செய்கின்றனரோ அதே நிலையில் ஒரு நிமிடம் இருக்க வேண்டும். அடுத்த ஒரு நிமிடம் அந்த யோகாசனத்தில் செய்வதால் பெறக்கூடிய  நன்மைகள் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி அவர்கள் விளக்கலாம். திங்கள் கிழமை அன்று இந்த வீடியோக்கள் ஹலோ எப்எம் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மக்களிடையே யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதனுடைய நன்மைகள் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று  ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக யோகாவை பிரபலப்படுத்துவதற்காக மத்திய அரசு நிறுவிய “சர்வதேச யோகா நாள் ஊடக விருது” தந்தி குழுவிற்கு சொந்தமான எஃப்எம் வானொலி நிலையமான ஹலோ எஃப்.எம்.

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தந்தி டிவி மற்றும் ஹலோ எஃப்எம் மற்றும் ஹலோ எஃப்எம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதவன் ஆதித்யன் மற்றும் ஹலோ எஃப்எம் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் நம்பியார் ஆகியோருக்கு வழங்கினார். 

"திருச்சியின் ஹலோ எஃப்.எம்-க்கு சர்வதேச யோகா தின ஊடக விருது ஒரு மகத்தான மரியாதை, இது யோகாவைப் பரப்புவதற்கு மேலும் பலவற்றைச் செய்யத் தூண்டுகிறது" என்று அதவன் ஆதித்யான் விருதைப் பெற்ற பின்னர் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF