“திருச்சி சங்கமம் - நம்ம ஊரு” திருவிழா 2 நாட்கள் - ஆட்சியர் தகவல்

“திருச்சி சங்கமம் - நம்ம ஊரு” திருவிழா 2 நாட்கள் - ஆட்சியர் தகவல்

நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடுவதற்கும் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தவும் "திருச்சி சங்கமம் - நம்ம ஊரு" திருவிழா என்ற பெயரில் நடத்திட அரசால் ஆணையிடப் பட்டுள்ளது.

இந்த திட்டத்தினை திருச்சியில் செயல்படுத்தும் விதமாக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களைக் கொண்டு "திருச்சி சங்கமம் - நம்ம ஊரு"திருவிழா வருகிற 26-ந் தேதி, 27-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைக் கொண்டு இந்த விழா நடத்தப்பட உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் உள்ள நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், ஆண்கள் - பெண்கள் தப்பாட்டம், நாட்டுப்புறப் பாடல் கிராமிய பல்சுவை, காளியாட்டம் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அழிந்து வரும் கலைகளில் அறிய வகையான கலைகளான பொம்மலாட்டம், கொம்பு வாத்தியம், இலாவணி, பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலைகள் நடத்தப்பட உள்ளன.

மேலும் பேண்ட் வாத்தியம், சிலம்பாட்டம் புலியாட்டம் மல்லர் கம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இந்த மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision