திருச்சியில் வரும் 12ஆம் தேதி கழிவு வாகனங்கள் பொது ஏலம்
திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 5 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விடப்படுகிறது. வருகின்ற (12-10-2022) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் (11.10.2022) ம் தேதி காயை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (12/10/2022) காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000/- மற்றும் நான்கு சக்கர-வாகனத்திற்கு ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 181%) முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரணா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO