கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகபாதுகாப்பு திட்டம்) அலுவலகம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள்

அரசு பள்ளி மற்றும் அரசு உதவித்தொகை பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த தரத்திலான கல்வியினை வழங்கும் நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகள் மூலம் கல்வி வழங்க தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

தனியார் பள்ளிகள் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு கல்வி வழங்கவும், அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி பள்ளி களில் 10-ம் வகுப்பு வரை பயின்று அதிக மதிப்பெண் பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தனியார் பள்ளிகளில் 2023-24 கல்வியாண்டிற்கு பிப்ரவரி-2023 மற்றும் மார்ச்-2023 ஆகிய மாதங்களில் சேர்க்கைகள் நடைபெறுவதால் அதற்குரிய நடைவடிக்கைகள் ஏற்படுத்தும் பொருட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பெறப்படும் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn