திருச்சியில் சைக்கிள் போட்டி - மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தகவல்

திருச்சியில் சைக்கிள் போட்டி - மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தகவல்

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 15.09.2022 அன்று காலை 6.30 மணிக்கு மாணவ, மாணவியர்களுக்கான சைக்கிள் போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு மூன்று பிரிவுகளில் சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்கு
1). 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு 15 கி.மீ. (1.1.2010க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)
2). 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 20 கி.மீ (1.1.2008 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)
3). 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 20 கி.மீ (1.1.2006 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)

மாணவியர்களுக்கு
1). 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு 10 கி.மீ (1.1.2010 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)
2). 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 15 கி.மீ (1.1.2008 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)
3). 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 15 கி.மீ (1.1.2006 க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)
மேற்காணும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பின்வருமாறு பரிசுத் தொகை காசோலையாக 
வழங்கப்படவுள்ளது. 

பரிசு விவரம் பரிசுத் தொகை :
1). முதல் பரிசு ரூ.5000.00
2). இரண்டாம் பரிசு ரூ.3000.00
3). மூன்றாம் பரிசு ரூ.2000.00
4). 4 முதல் 10 இடங்களில் வரும் 7 நபர்களுக்கு ரூ.250.00

விதிமுறைகள் :
1). போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவ - மாணவியர்கள் தங்கள் சொந்த செலவில் சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும்.
2). சாதாரண மிதி வண்டியாக இருத்தல் வேண்டும் (இரண்டு பிரேக்குகளுடன்)
3). அகலமான கிராங்க் (புநயச) பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்துதல் கூடாது.
4). சாதாரண கைப்பிடி (ர்யனெடந டீயச) கொண்ட மிதிவண்டியாக இருத்தல் வேண்டும். 
5). மிதிவண்டி போட்டியில் நேரும் எதிர்பாரா விபத்துகளுக்கும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ & மாணவியர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். 
6). முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 
7). மாணவ - மாணவியர்கள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அண்ணா விளையாட்டரங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழுடன் வருகைதர வேண்டும்.

வயது சான்றிதழ் இல்லாதவர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி, தொலைபேசி எண் : 0431-242068 தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீகுமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO