குடும்பத்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது மாமன் படத்தின் வெற்றி- நடிகர் சூரி

குடும்பத்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது மாமன் படத்தின் வெற்றியாகும் திருச்சியில் நடிகர் சூரி பேட்டி.புரோட்டா சூரி என திரை உலகில் அழைக்கப்படும் சூரியின் புதிய திரைப்படம் "மாமன்" தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்த "மாமன்" திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார் சூரி. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி காவேரி திரையரங்கத்தில் ரசிகர்களை சந்தித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் கூறுகையில்....
"மாமன்" திரைப்படம் வெளியாவதற்கு முன்பே குடும்பத்தில் நடந்ததை நினைவுபடுத்தும் திரைப்படமாக இருக்கும் என கூறியிருந்தோம் என்ன கூறினோமோ அது தான் தற்பொழுது நடக்கிறது.மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள் அவர்களுக்கு நன்றி சொல்வதற்காக நேரடியாக திரையரங்கிற்கு வந்துள்ளோம் என தெரிவித்தார்.மாமன் படத்தில் முதல் பாதியில் அதிகமான நகைச்சுவை காட்சியும், இரண்டாம் பாதியில் அதிக உணர்ச்சிபூர்வமான காட்சிகள் உள்ளது.
இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது "மாமன்" படத்தினுடைய வெற்றியாக உள்ளது.எனது அடுத்த படம் ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருக்கும். நடிகர் சிவகார்த்திகேயனோடு மீண்டும் காமெடி படத்தில் இணைந்து நடிக்க சொன்னால் அவரே என்னை அழைத்துக் கொள்ள மாட்டார். அடுத்த படத்தில் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார்.
அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம்.நகைச்சுவை நடிகராக நடிப்பதை விட கதாநாயகனாக இருக்கும் பொழுது கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே உணர்கிறேன் என தெரிவித்தார்.என்னுடைய அன்பு தம்பிகள் சினிமாவை கொண்டாடுகள் ஆனால் முதலில் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார்
யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள் நீங்கள் உங்களது உறவினர்களுக்கு போன் செய்து பேசுங்கள், உங்களது கோபம் போய்விடும் உறவு முக்கியம் என்ற சூரி, தனது தம்பியிடம் ஒரு வருடமாக பேச்சுவார்த்தையில் இல்லை.திருவெறும்பூர் அருகே சூரி கதாநாயகனாக நடித்த மாமன் திரைப்படம் ஒடும் தியேட்டரில் ரசிகர்களை நேரில் சந்தித்து பட வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அதற்கு நன்றி இந்த தியேட்டரில் தனது இந்த படம் எடுக்கப்பட்டது அதே தியேட்டரில் தற்பொழுது வெளியாகி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் படத்தின் முதல் பாதியில் காமெடியாகவும் இரண்டாவது பாதி குடும்ப உறவின் முக்கியத்துவம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.படத்தின் டைரக்டர் பிரசாத் பாண்டியராஜ் பேசியதாவது குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்க வரும் அனைவருக்கும் நன்றி வருடத்திற்கு ஒரு படம் குடும்ப படம் வர வேண்டும் என்றார்.இதனுடைய சிறுவன் பிரதீப் சிவன் பேசும்போது லைக் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க எனக்கு கலாய்த்து பேசினார்.
இந்த திரைப்படம் திருச்சியில் எடுத்த படம் என்றும் அதனால் திருச்சியில் பெரும்பாலான இடங்கள் இதில் வரும்.விஷால் திருமண தேதி அறிவித்து இருப்பது நல்ல விஷயம் வாழ்த்துக்கள்.அரசியலில் மாற்றம் வருமா கண்டிப்பாக மாற்றம் வரும்.சைடு ரோல், காமெடி நடிகர், ஹீரோ அடுத்து என்ன? என்ற கேள்விக்குமக்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். நன்றாக போய்க்கொண்டிருக்கிறது அப்படியே போகட்டும்.ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?
ரசிகர்கள் அனைவரும் முதலில் குடும்பத்தை பாருங்கள் அதன் பிறகு தான் மற்றது எல்லாம் ஒருவருக்கொருவர் முகம் சுழித்துக் கொள்ளாமல் சந்தோஷமாக இருங்கள்இணையத்தில் வைரலாகும் சகோதரர் கரைக்கடை வியாபாரி இடம் பிரச்சனை செய்வது பற்றி கேட்டதற்கு,அவருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision