திருச்சி மேலப்புதூர் பாலத்தில் கசிந்து வழியும் நீர் - அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!!

திருச்சி மேலப்புதூர் பாலத்தில் கசிந்து வழியும் நீர் - அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!!

Advertisement

திருச்சி மேலப்புதூர் சப்வே பாலத்தின் அடியில் நீர் கசிந்து வெளியேறுவதால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநகராட்சி தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement

திருச்சி மேலப்புதூரில் உள்ள பாலம் மிகவும் பழமை வாய்ந்தது. இங்குள்ள பாலத்திற்கு மேலே ரயில்வே பாதையும் செல்கிறது. மழைகாலங்களில் இந்தப் பாலம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு தெப்பக்குளம் போல காட்சியளிக்கும்.

Advertisement

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்கரை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு முக்கிய பகுதியாக உள்ள இந்த மேலப்புதூர் பாலத்தில் தற்போது பாலத்தின் கீழே நீர் கசிந்து வெளியேறுவதால் அங்கு பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். 

உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு கசிந்து வெளியேறும் நீரை தடுக்கவும் அங்கு உள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் கடந்த வாராமாக நீர் கசிந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது‌. 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM