புதுப்பொலிவுடன் ஶ்ரீரங்கம் ரயில் நிலையம் - நாளை பிரதமர் மோடி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்

ரயில்வேயில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நாளை (மே.22) திறந்து வைக்க உள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் ஶ்ரீரங்கம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு ₹.6.18 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் ரயில் நிலைய நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு
அறை, நவீனமயமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தின் பழைய நுழைவாயில் இடித்து அப்புறப்படுத்தி விட்டு, ஶ்ரீரங்கம் கோவில் கோபுரம் மாதிரியான முகப்பு அமைப்புடன் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம் முன்பு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பயணிகளின் பயன்பாட்டிற்காக கழிவறைகள், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் அமர்வதற்கான நாற்காலிகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், சிசிடிவி, வைஃபை வசதி, கூடுதல் தண்ணீர் குழாய்கள், கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் ரயில் நிலைய நுழைவு வாயிலில் சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் குறைந்த மின் சக்தியை பயன்படுத்தும் வகையில் ரயில் நிலைய கட்டிடங்கள் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision