அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதை கண்டித்து தூக்கு தண்டனை வழங்க பரிந்துரைத்த நீதிமன்றத்திற்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு!

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதை கண்டித்து  தூக்கு தண்டனை வழங்க பரிந்துரைத்த நீதிமன்றத்திற்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு!

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதை கண்டித்து நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி கொடுத்துள்ளார்.

Advertisement

திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது .அதில் புதிய வேளாண் மசோதா சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அதனை தமிழக அரசு அமல்படுத்த கூடாது அதை கண்டித்து வருகிற 26-ஆம் தேதி தலைமைச் செயலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்த நெல்யை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மழைகளில் நனைய வைத்து முளைத்து வீணாக கூடிய நிலையை தடுக்க வேண்டும். அதேபோல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறக்கூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியதற்கு வரவேற்பையும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

காவிரி- புதுகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை காலதாமதம் இல்லாமல் விரைவில் துவங்க வேண்டும். இலவச மின் இணைப்பு உடனடியாக  விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement