மீன் மார்கெட்டாக மாறும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் - பொதுமக்களுக்கு தடை!!

மீன் மார்கெட்டாக மாறும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் - பொதுமக்களுக்கு தடை!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை(07/06/2021) முதல் மீன் சந்தையாக செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... தமிழக அரசு சார்பில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு 24/05/2021 முதல் 06/06/2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

தற்போது 14 ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருச்சி மாநகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மீன் சந்தைகளில் மீன் விற்பனைக்கு அனுமதி இல்லை.

Advertisement

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த விற்பனை செய்யும் மீன் கடைகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இங்கு வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க படுவதாகவும், சில்லறை விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve