மீன் சந்தையாக மாறிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்

மீன் சந்தையாக மாறிய திருச்சி மத்திய பேருந்து நிலையம்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார். இதில் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் காய்கறி மற்றும் மீன் சந்தைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் கடைபிடிக்காமல் அதிகளவில் கூடுவதால் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் இயங்கும் என்றும், இதில் மொத்த வியாபாரம் மட்டும் அனுமதி அளித்து நேற்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் காலை 4 மணி முதல் செயல்பட தொடங்கியது. இதில் மொத்தம் 22 மொத்த வியாபார கடைகள் போடப்பட்டிருந்தன. இதற்கிடையில் இங்கு சில்லரை விற்பனை இல்லாததால் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களாக செயல்படாமல் இருந்த மீன் சந்தை தற்பொழுது இன்று முதல் செயல்பட தொடங்கியதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது.

இதனால் காலை 4 மணிக்கு தொடங்கிய மீன் சந்தை 8 மணிக்கெல்லாம் முடிவு பெற்றது. மீன்பிடி தடை காலம் மற்றும் ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் மீன்கள் மொத்த விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த மீன் சந்தைக்கு பொதுமக்கள் வரக்கூடாது என்றும் வியாபாரிகள் சில்லரை வியாபாரம் செய்ய கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் மீன் சந்தை போடப்பட்டிருப்பதால் இருப்பதால் கழிவு நீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லாததாலும், இங்கு முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve