ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊராட்சி மன்ற தலைவராக கலைச்செல்வி இருந்து வருகிறார்.
ஆனால் ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவரின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், பொதுமக்களுக்காக குடிநீர் கிணறு ஒன்று ஊராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டதாகவும் அது ஒரு தனியார் நிலத்தில் அமைந்து இருப்பதாகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூறினார்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கீழ் பணிபுரியும் 100 நாள் பணியாளர்களுக்கு வேலை செய்யாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைகேடு நடப்பதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக ஊராட்சி செயலர் இதே ஊராட்சியில் பணியாற்றி வருவதால் ஊழல்கள் மலிந்து உள்ளதாகவும்,
தளுகை ஊராட்சி நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகளை முறையாக தமிழக அரசு தணிக்கை செய்ய வேண்டும் என்றும் ஊராட்சி செயலாளருக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாதர் பேட்டை கிளைச் செயலாளர் முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். ராஜாஸமுன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் மருதை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் துறையூர் ஒன்றிய செயலாளர் சேகர், சந்திரசேகரன் , அருள்மொழி வர்மன், ஆண்டி, பாஸ்கர், சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn