திருச்சியில் மற்றொரு சாராய வீதி

திருச்சியில் மற்றொரு சாராய வீதி

திருச்சி மாநகராட்சியின் 23 ஆவது வார்டு பகுதியில் உள்ளது கீழ சாராய பட்டரைத் தெரு.திருச்சி மாநகராட்சி ஆவதற்கு முன்பு நகராட்சியாக இருந்த பொழுது கீழ சாராயப் பட்டறை தெரு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.

பொதுமக்கள் அப்போது இருந்த நகராட்சி வார்டு உறுப்பினர் தாக்கிய சம்பவம் 7 ஆண்டுகள் வழக்கும் நடைபெற்றது. தொடர்ந்து தற்பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநகராட்சி 23 வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராக இருக்கும் சுரேஷ் திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இந்த தெருவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஒன்பதாம் மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

இது மட்டுமில்லாமல் ஜாதி பெயரில் உள்ள தெரு பெயர்களை நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவரிடம் உங்கள் தெரு பெயர் முகவரியை கேட்டால் இதனை உச்சரிக்கும் பொழுது அவர்கள் கூச்சப்படுவதுடன் கோபமும் வருவதாக தெரிவித்துள்ளனர். தற்பொழுது தமிழகத்தில் சாராயம் என்ற வார்த்தை சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள நிலையில் இப்பேரை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியிலும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

இப்பகுதி திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. மேற்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் கீழ சாராயப் பட்டறை தெரு என்றே உள்ளது. 

அரசாங்கம் பதிவேட்டில் இருந்து இப்பெயரை நீக்கி தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என தற்பொழுது பொதுமக்களிடமும் மாமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை வலுத்து வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க முற்படும் அரசு இதுபோன்ற சாராயப் பெயர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அனைவரின் விருப்பமாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn