முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுசரித்த தமிழக வெற்றி கழகத்தினர்- மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

திருச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுசரித்த தமிழக வெற்றி கழகத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த ஈழத் தமிழர்களின் நினைவாக, வருடம் தோறும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு நிகழ்ச்சி நடத்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட சார்பில் திருச்சி வயலூரில் உள்ள விஜய் மஹாலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போரின் போது உயிர் நீத்த தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அனைவரும் 2, நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision