டென்ஷனான கமிஷனர்- ரவுடி, சாமியார் ,வழக்கறிஞர் மூவரும் கைது

டென்ஷனான கமிஷனர்- ரவுடி, சாமியார் ,வழக்கறிஞர் மூவரும் கைது

திருச்சி அல்லித்துறை வன்னியம்மன் கோவில் பகுதியில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்.மூன்று கோடி ரூபாய்க்கு ஒரு கோவில் கட்டி வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக முக்கிய பிரமுகர்களுக்கு வெற்றி வாய்ப்பு மற்றும் ஆசிர்வாதமும் வழங்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வில் இந்த சாமியார் பாலசுப்பிரமணியம் முன்னின்று நடத்தி உள்ளார்.

பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரபல ரவுடி பட்டியல்கள்  என்கவுண்டர்  குறித்தும் ஆடியோ பேச்சு வெளியானது . அதில் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அது ரவுடிகளின் பட்டியல் மற்றும் என்கவுண்டர் இதுபோன்ற பேச்சுகளும் இடம்பெற்றிருந்தது அதில் முக்கியமாக கொட்டப்பட்டு ஜெய் ரவுடி பெயரும் முதலில் பேசிய இருந்தது.

இது தொடர்பாக ஏற்கனவே திருச்சி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர் . தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் பாலசுப்பிரமணியன் மற்றும் பிரபல ரவுடி கொட்டப்பட்டு ஜெயக்குமார் இருவரையும் கைது செய்து பொன்மலை காவல் நிலையத்தில் போலீசார் வைத்து உள்ளனர். அதில்  காவல்துறை அதிகாரிகள் குறித்தும் ஆடியோ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலசுப்ரமணியம் இந்த ஆடியோ பேச்சுகளை வழக்கறிஞர் கார்த்தி என்பவருடன் தான் பேசியுள்ளார் .ஆகவே மூன்றாவது நபராக வழக்கறிஞர் கார்த்தியும் கைது செய்யப்படுகிறார். முக்கியமாக பிரபல ரவுடி கொட்டப்பட்டு ஜெய் மீது தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் 10 .ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் சாட்சி சுந்தர்ராஜ் தொடர்ந்து மிரட்டி வந்ததும் ஜெய் அதுமட்டுமில்லாமல் இந்த ஆடியோ வெளியானது தொடர்பாக மீண்டும் மிரட்டல் விடுத்ததால் இவ்வழக்கில் அவரையும் சம்பந்தப்படுத்தி பொன்மலை காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.341,294b,353,505 (1) (b),506 (2),195(N) பிரிவுகளின் கீழ் இந்த மூவரும் பொன்மலை காவல் நிலைய போலீசார் கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I