திருச்சி ஹோலிகிராஸ் கம்யூனிட்டி ரேடியோ யுனிசெஃப் தேசிய திட்டத்திற்கு தேர்வு

திருச்சி ஹோலிகிராஸ் கம்யூனிட்டி ரேடியோ யுனிசெஃப் தேசிய திட்டத்திற்கு தேர்வு

திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி நடத்தும் ஹோலி கிராஸ் கம்யூனிட்டி ரேடியோ (90.4 மெகா ஹெர்ட்ஸ்) யுனிசெஃப் நிதியுதவி அளிக்கும் தேசிய திட்டத்தில் கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒரு கூட்டாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள சமூக வானொலி சங்கத்தால்  பங்குதாரராக HCCR தேர்வு செய்யப்பட்டுள்ளது. யுனிசெஃப் உலகளவில், சமூக வானொலி நிலையங்கள் மூலம், பொது சேவை ஒளிபரப்பாளர்களை அணுகி வருகிறது, ஒவ்வொரு கூட்டாளர்களும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப தலைப்புகளை வடிவமைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருச்சி ஹோலி கிராஸ் 
கல்லூரியைச் சுற்றி சுமார் 5 முதல் 6 கி.மீ சுற்றளவில் ஒரு டிரான்ஸ்மிட்டரைக் கொண்டு, எச்.சி.சி.ஆரின் கேட்போர் பெரும்பாலும் ஜீவநகர், தர்மநாதபுரம், கல்நாயக்கன் தெரு மற்றும் கோலதமெடு ஆகிய பகுதிகளில்  உள்ளனர்.

இந்த திட்டம் 
பேரிடர் காலகட்டத்தில் பெருவாரியாக  தன்னார்வலர்களாக  இளைஞர்களின் பங்கு அளப்பரியது எனவே இந்த ஆண்டு இத்திட்டத்தில் கொரானா  போராளிகள் "Young warriors"என்ற பெயரில் இளைஞர்களை கொண்டு  சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இன் நிகழ்வானது திட்டமிடப்பட்டுள்ளது.முதல் நிகழ்ச்சியானது
 ஜூலை மாதம் 26ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

 இந்நிகழ்ச்சியில் பேசப்படும் நிகழ்வுகளாக யுனிசெஃப் பரிந்துரைத்த படி தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களையும் அதற்கான தீர்வுகளை வழங்கும் விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

 இந்த நோய்த்தோற்று காலகட்டங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றியான விளக்கங்கள் விளக்கங்களையும்  மக்களோடு  கல்லூரியில் விஸ்காம் துறை மாணவர்கள் இணைந்து  நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்படும்.

 மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், குறிப்பாக இக் காலகட்டத்தில் பெரிதும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில்  மனநல மருத்துவர்கள் கொண்டு  சந்தேகங்களுக்கான தீர்வுகள் வழங்குதல் போன்ற போன்றவற்றை நிகழ்ச்சிகளாக இரண்டு மாதங்களுக்கு  தொடர்ந்து ஒலிபரப்பப்படும்என்றார்.

 இந்த பொது சுகாதார அவசரகாலத்தின் போது, ​​
 நம்மைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கு ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்க நாங்கள் ஒன்றிணைய முடியும்" என்று ஹோலி கிராஸ் கல்லூரியின் முதல்வர் ரெவ். சீஸ்டர் கிறிஸ்டினா பிரிட்ஜெட் கூறினார்.

சமுதாய வானொலி நிகழ்வுகளை  சமூக அக்கறை கொண்டு செயல்படுத்துவதற்கு  மிக முக்கிய காரணமாக கல்லூரியின் முதல்வர் செயல்பட்டுள்ளார்.

Media house என்ற பெயரில் 
வானொலி,வலையொளி   அனைத்தையும் மக்களுக்கு  பயண்படும் வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை   ஒருங்கிணைத்து இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்த்தும்போதும் கூட  மாணவர்களுக்கு மட்டும் சென்று சேர்வதற்கு பதிலாய்  வலையொளிமூலம்   பொது மக்களுக்கும் சென்றடைந்திட   வேண்டும் என்று நேரலையில்  நடத்த திட்டமிட்டு  புதிய வலையொளி தளத்தையும் உருவாக்கிட உறுதுணையாக நின்று  செயல்படுத்தி உள்ளார்.

இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் சமுதாய வானொலி மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு தங்கள் கல்லூரி வலைஒளி மூலமாகவும் காணொளிகளை பதிவிட்டு குறிப்பாக மருத்துவ ஆலோசனைகளை பதிவிட்டு மக்களுக்கு உதவி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I