திருச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் திருநாள் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்..

திருச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் திருநாள் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்..

தமிழ்நாடு முதலைமைச்சர் 2025-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோக திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிரமமின்றி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு முன்னதாக அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

திருச்சி மாவட்டத்தினைப் பொறுத்தவரை, நடைமுறையிலுள்ள 8,33,131 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் ஆக மொத்தம் 8,34,099 குடும்பங்களுக்கு 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை, சின்ன மிளகுபாறை, பொன்னகர், கருமண்டபம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்..

குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் தாங்களது குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி நேரம் ஆகியவற்றினை பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision