திருச்சியிலுள்ள கோவில்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சிறப்பு தரிசனம்

திருச்சியிலுள்ள கோவில்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தோழி சிறப்பு தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பல்வேறு ஆலயங்களுக்கு சென்று  தரிசனம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்ற திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் தரிசனம் செய்தார். பின்னர்

தஞ்சையிலிருந்து இன்று காலை திருச்சி வந்ததிருந்தார். பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலகாமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவிடம் ஆசி பெற்ற சசிகலா ஆனைக்கா அன்னல் கோபுரம் வழியாக சென்ற ஜம்புகேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதிக்கு சென்றார்.

சசிகலாவை வரவேற்பதற்காக 
அ.ம.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருவானைக்காவல் ஆலயத்திற்கு முன்பாக குவிந்திருந்தனர். இதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் அக்கரைப்பேட்டை சீரடி சாய்பாபா மற்றும் உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO