புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை ஊராட்சி ஒன்றிய பைத்தம்பாறை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், முசிறி ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision