மீன் வளர்ப்போருக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வளர்ப்பு பல்கலைக்கழக வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு இயக்க நிகழ்ச்சி திருச்சி மையம் கிரியா அறக்கட்டளை திருச்சி மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தார் புதுதில்லி இணைந்து நடத்திய மீன் வளர்ப்பதற்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் என் தமிழ்செல்வன் மீன் பழங்காலத்திலிருந்தே இயற்கை ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட ஒரு மலிவான மற்றும் எளிதில் செரிமானத்திற்கு ஏற்ற புரதம் நிறைந்த மற்றும் மனிதர்களுக்கு ஏற்ற உணவாகும் விவசாயிகள் எளிதான முறையில் கிராமத்தில் குளம் நீர் தொட்டி அல்லது மற்ற நேரங்களிலும் மீன் வளர்ப்பை கொண்டு தங்களது நிதித் தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
தற்போது நவீன தொழில்நுட்பமாக தொட்டி முறை மீன் வளர்ப்பு வரவேற்பு பெற்று வருகிறது பயோ பிளாக் தொழில்நுட்பம் என்பது புதிய நீலப்புரட்சி என்று கருதப்படுகிறது. பயோஃப்ளாக் தொழில்நுட்பம் என்பது சூழலுக்கு ஏற்ற மீன்வளர்ப்பு நுட்பமாகும் இதில் ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்டு மீன் வளர்ப்பு ஊடகத்தில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
பயோஃப்ளாக் தொழில்நுட்பம் பற்றி வளங்குன்றா நீர் உயிரி வளர்ப்பு இயக்கம் திருச்சி மைய உதவி பேராசிரியர் சங்கவி எடுத்துரைத்தார் மீன் வளர்ப்பிற்கான மானிய திட்டங்கள் குறித்து மீன் வள மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குனர் ரம்யா லெட்சுமி எடுத்துரைத்தார். புதுதில்லி எவரெஸ்ட் நிறுவன இயக்குனர் அமித் கபூர் கலந்து கொண்டு மீன் வளர்ப்பில் பயன்படுத்தப்படும் காற்றோட்ட தொழில்நுட்ப கருவிகள் குறித்து விளக்கினார்.
அசோலா வளர்ப்பு பற்றி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய பயிர் வினையியல் உதவிப் பேராசிரியர் முனைவர் நித்திலா எடுத்துரைத்தார் பயோஃப்ளாக் தொழில்நுட்ப செயல் விளக்கத்தை சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய வேளாண் விரிவாக்கம் உதவி பேராசிரியர் ஆனந்த் அளித்தார்.
வேளாண்மை அறிவியல் நிலையா உதவிப் பேராசிரியர் நித்திலா வரவேற்றார். உதவி பேராசிரியர் ஆனந்த் நன்றி கூறினார் நிகழ்ச்சியின்போது விவசாயிகள் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO