சாலையில் கிடந்த ரூ. 2 லட்சத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து பாராட்டிய மாநகர காவல் ஆணையர்
திருச்சி தில்லைநகர் பகுதியில் டிபன்கடையில் வேலைபார்த்து வரும் ராஜேஸ்வரி என்பவர் நேற்று (11.08.22)-ந்தேதி வழக்கம்போல் தனது வேலைக்காக வந்தபோது கடையின் அருகே சாலை ஓரத்தில் கிடந்த காகித பையை எடுத்து பார்த்தபோது அதில் அதிகபடியான பணம் இருந்துள்ளது.
அதன்பின்னர் தான் வேலைபார்த்து வரும் டிபன் கடையின் உரிமையாளர் திரு.பிரபாகர் என்பவர் உதவியுடன் சாலையில் கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் விசாரித்தில் பணத்தை ஒப்படைத்த ராஜேஸ்வரியின் தினசரி சம்பளம் ரூ.100 என தெரியவந்தது.
இதனை அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ராஜேஸ்வரி தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்படாமலும், நேர்மை தவறாமல் சாலையில் கீழே கிடந்த ரூ.2 லட்சம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரை நேரில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்தும், பரிசாக ஒரு கிராம் தங்கநாணயம் வழங்கியும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO