பூட்டிய வீட்டை உடைத்து 25 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் திருட்டு

பூட்டிய வீட்டை உடைத்து 25 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் திருட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது கும்பக்குடி ஊராட்சி. இங்குள்ள அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் ரங்கராஜ் (60). இவர் அப்பகுதியில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி (56). இவர் காந்தளூர் ஊராட்சி இலந்தைப்பட்டி கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி விற்கப்பட்ட வீட்டை வாங்கி தனியே வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ராஜலட்சுமி கேரளாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டார். ரெங்கராஜ் மட்டுமே வீட்டில் வசித்து வந்தார். நேற்று 15ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வாட்டர் டேங்க் மோட்டார் போடுவதற்காக சென்று அங்கேயே தங்கி விட்டார். இன்று காலை 7 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டின் கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் திருடு போயிருந்தது. இதில் சுமார் 25 பவுன் நகைகளும், ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் திருடு போனதாக கூறப்படுகிறது.

சுற்றுலா சென்றுள்ள ராஜலட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்தால்தான் திருடு போன பணம் நகைகளின் மதிப்பு முழுமையாக தெரிய வரும். இதுகுறித்து தகவல் அறிந்த நவல் பட்டு போலீசார், தடய அறிவியல் மற்றும் மோப்ப நாய் பிரிவுக்கு தகவல் அளித்து மோப்பநாய் காவேரி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவம் நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் வரை சென்று நின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் இதே மாதிரி துவாக்குடி காவல் நிலைய பகுதியில் நிலா முத்துப்பட்டி கிராமத்தில் 30 அரை பவுன் நகையும், ரொக்கமும் திருடு போன ஒரே வாரத்தில் அதேபோல் மற்றொரு சம்பவம் நவல்பட்டு காவல் நிலையப் பகுதியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision