மக்கள் பயன்பாட்டிற்கு தயாராகும்   ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்

மக்கள் பயன்பாட்டிற்கு தயாராகும்   ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மூன்று முக்கிய திட்டங்களான உய்யகொண்டான் ஆற்றங்கரை சீரமைப்பு பணி, சத்திரம் பேருந்து நிலையம் மறுசீரமைப்பு, வணிக வளாகம் ஆகிய திட்டங்கள் இதில் உள்ளடங்கி உள்ளது. 
இம்மூன்று திட்டங்களும் கிட்டத்தட்ட நிறைவடைய உள்ள நிலையில் தேர்தலுக்கு பின்னர் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி தில்லைநகர் 7வது கிராசில் ஏற்கனவே செயல்பட்டு வந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டு தற்போது மூன்றடுக்கு கட்டிடமாக 15 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. 1972-ல் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் 8 கடைகளும், காவல்துறை மற்றும் தபால் துறை அலுவலகங்களும் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் மாதம் ரூபாய் 25 ,000 வாடகை பெறப்பட்டு வந்தது. வணிக வளாகத்தை மேம்படுத்துவதற்காக தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிகவளாகம் 51,000 சதுர அடியில் கட்டப்பட்டு வருகின்றது.

கிட்டத்தட்ட அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைய உள்ள நிலையில் எலக்ட்ரானிக் மற்றும்  தளம் போடுதல் ஆகிய வேலைப்பாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த வணிக வளாகம் முழுவதும் திருச்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. பராமரிப்பு பணியை எளிதாக்குவதற்காக ஒருவரிடமே கையெழுத்திடப்பட்டது. வணிக வளாகத்தில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று 
மாநகராட்சி அலுவலர்கள் கூறியுள்ளனர்.

உய்யக்கொண்டான் ஆற்றங்கரை மறுசீரமைப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவடைய உள்ளது. 17.56கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும்  மூன்று பூங்காக்களும் அமைத்தல், பாரதியார் நகர் பகுதியின் கால்வாயின்  தெற்கு பகுதி சுவரை சீரமைத்தல் ஆகிய பணிகள் அனைத்துமே முடிவடைய உள்ளது.

இதேபோன்று சத்திரம் பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகளும் கிட்டத்தட்ட 90% முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu