திருச்சியில் உலக இயற்கை கட்டிடக்கலை மாதம் சிறப்பு நிகழ்ச்சி

திருச்சியில் உலக இயற்கை கட்டிடக்கலை மாதம் சிறப்பு நிகழ்ச்சி

இயற்கை பாதுகாப்பு பற்றிய பார்வையை மக்களுக்கு வெளிப்படையாக உணர்த்தும் விதத்தில் இந்தியன் சொசைட்டி ஆஃப் லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் (ISOLA) ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் world Landscape Architecture Month (WLAM) என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். இவ்அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கிளையின் ஒரு பகுதியாக மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் திருச்சியில் வரும் 17ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கொரானா  காலகட்டம் என்பதால், இந்நிகழ்ச்சியானது ஆன்லைன் மூலமாக வீடியோ  வழியாக நடைபெற இருக்கிறது.

இயற்கை சார்ந்த நிலப் பரப்பு, நீர் நிலைகள் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்க வேண்டும் குறிப்பாக திருச்சியை சேர்ந்த பாரம்பரியமிக்க பண்பாட்டு வரலாற்றையும் மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்க காவிரி, கொள்ளிடம், மற்றும் உய்யக்கொண்டான் கால்வாய் ஆகியவற்றை பற்றிய கருத்தரங்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னையில் அழிந்து போன கொசஸ்தலை ஆறு கண்டுகொள்ளாதது போல் திருச்சியின் புகழ்மிக்க உய்யக்கொண்டான் கால்வாய் நாளடைவில் அழியும் அபாயத்தில் உள்ளது. இதுப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று முக்கிய கருத்தை இந்நிகழ்ச்சியில் கொண்டுள்ளோம்.

இதில் சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர் கே நரசிம்மராவ், ஏ.ஆர் பிரசன்னா தேசாய் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க மக்களிடையே  திருச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பற்றிய விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சியாக அமையும்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு 17ஆம் தேதியன்று பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu