சிறுவனைக் கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்ட இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சிறுவனைக் கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்ட இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணேசாபுரம் 
புதுத்தெருவில் உள்ள சிக்கன் கடையில் 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கடந்த 10.07.2021 அன்று இரவு சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பணத்திற்காக தனது மகனை திருச்சி பொன்மலை கணேசாபுரத்தை சேர்ந்த 1) பிரபு 33, சோனி (எ) பாரத் 23, செந்தில்குமார் (37) மற்றும் ஒருவர் கடத்தி சென்றதாக சிறுவனின் தந்தை ரமேஷ்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு மேற்பார்வையில் பொன்மலை காவல் ஆய்வாளர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அன்றைய தினமே 1 முதல் 3 வரையிலான எதிரிகள் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கொடூர ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர்

நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் குற்ற 
சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவு இளம்பிழையாளி கண்டறியப்பட்டு 26.07.2021-ந்தேதி சிறுவர் 
சீர்திருத்தப்பள்ளி மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். 
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் 1) பிரபு (33) மீது பொன்மலை, அரியமங்கலம் மற்றும் நிரவி (பாண்டிச்சேரி) ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பது புலன்விசாரணையில் தெரியவந்தது. மேலும் மேற்படி பிரபு மற்றும் சோனி (எ) பாரத் ஆகிய இருவரும் தொடர்ந்து இதுபோன்று ஆட்கடத்தல், கொலை 
மிரட்டல், கொலை மற்றும் பொதுமக்களின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் 
குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால்,

இவர்களது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு மேற்படி 2 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த பரிந்துரையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்புக் 
காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதன்படி மேற்படி எதிரிகள் இருவரும் 23.08.2021 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஆணை சார்வு செய்து திருச்சி மத்திய 
சிறையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn