திருச்சியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - 5 பேர் கைது 

திருச்சியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - 5 பேர் கைது 

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று 
29.07.2021-ந் தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பென்சனர் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அங்குள்ள குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் பாலக்கரை 
காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடங்களில் சோதனை செய்தனர்.

அச்சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் இருபது இலட்சம் (ரூ.20,00,000-) சந்தை மதிப்புள்ள 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1800 கிலோ (Hanz, Cool Lips, Chini Khini, Vimal, Pan Parag & RMD)  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும்

எதிரிகள் 1) திருவரம்பூர், பாரதிபுரத்தைச் சேர்ந்த பூமிநாதன், 2) பாலக்கரை, காஜாப்பேட்டை, புதுத்தெருவைச் சேர்ந்த இளங்கோ, 3) பாலக்கரை, காஜாபேட்டை, பென்சனர் தெருவைச் சேர்ந்த வடிவேல், 4) பாலக்கரை, காஜாப்பேட்டை, புதுத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் 5) அரியமங்கலம், சீனிவாசா நகரைச் சேர்ந்த பழனிகுமார் ஆகிய 5 பேரை கைது செய்த பாலக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வந்த ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ரூபாய் இருபது இலட்சம் (ரூ.20,00,000-) சந்தை மதிப்புள்ள சுமார் 1800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 5 நபர்களை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறையின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr