பாரதி ‌ மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு சந்திர கிரகணம் குறித்த விளக்க நிகழ்ச்சி

பாரதி ‌ மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு சந்திர கிரகணம் குறித்த விளக்க நிகழ்ச்சி

சந்திர கிரகணம் எனப்படும் நிலவு மறைப்பு முழு நிலவு நாளில் நடைபெறும் நிகழ்வாகும். இது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும் நாளில் அதாவது சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது நடைபெறும். அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். இதனால் நிலவு மறைக்கப்படும். பூமியின் நிழல் கரு நிழலாக விழும் பகுதி அம்ரா(Umbra) என்றும் அதன் புற நிழல் பகுதி பெனும்ரா(Penumbra) என்றும் அழைக்கப்படுகிறது. கரு நிழலானது நிலவின் மீது முழுவதும் விழுவது முழு சந்திர கிரகணம் ஆகும். புற நிழல் பகுதியானது கண்ணுக்கு அவ்வளவு தெளிவாக தெரியாது.

நிலவு மறைப்பின்போது நிலவு சிவப்பாகக் காட்சியளிக்கும். இதற்குக் காரணம் ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது ஒளி விலகல விலகலடைகிறது. சிவப்பு நிறம் அலைநீளம் அதிகம் கொடது எனவே குறைவாக விலகலடைகிறது. இந்த சிவப்பு நிறம் நிலவின் மீது படுகிறது. இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாகக் காணப்படுகிறது. இதைத்தான் Blood Moon என்பார்கள்.

இன்று (நவம்பர் 8, 2022) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க இயலாது . ஏனெனில் நிலவு உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்துக் கொண்டிருக்கும். தமிழ் நாட்டிலிருந்து பார்க்கும்போது நிலவு கிழக்கே 6:15 மணிக்கு உதிக்கும்போது  நிழல் விலகி சென்றுக் கொண்டிருக்கும். எனவே நிலவு மறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியாது.இந்தியன் வங்கி காலநிலையில் செயல்பட்டு வரும் பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கு சந்திர கிரகணம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.

இன்று திருச்சியில் சந்திர கிரகணம் தெரியாது. அதனால்  பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யய்படவில்லை.


உங்கள் பகுதியில் மறைப்பு நேரங்களை அறிந்துக் கொள்ள:

https://www.timeanddate.com/eclipse/lunar/2022-november-8

             

                                    

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO