தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்த நபர்கள் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும் முறையான அனுமதி இல்லாமலும் வெளிநாடு சிகரெட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அதில் காந்தி மார்க்கெட் காவல்நிலையை எல்லைக்குட்பட்ட கடைகளிலும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியசாமி டவரிலும் பெரிய கடைவீதியில் உள்ள கடைகளிலும் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் நிகோடின் அளவு இல்லாத தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்தவர்களை கைது செய்தும் மற்றும் சுமார் 4,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் 40 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே இளைஞர்களையும் சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் கஞ்சா குட்கா மற்றும் வெளிநாட்டு சிகரெட் பொருட்களை விற்பனை செய்பவர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO