உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என கூறி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு- 3 பேர் மீது வழக்கு பதிவு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என கூறி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பு-  3 பேர் மீது  வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என கூறி கடை உரிமையாளரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுஇரண்டு பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தலைவனை தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல்.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் சொந்தமாக அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் ஆனந்தின் கடை வந்த இரண்டு டிப்டாப் ஆசாமிகள் உணவு பாதுகாப்புதுறை, காவல்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறி கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பார்த்த ஆசாமிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம் ஆகையால் உங்களை போலீசில் ஒப்படைத்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி மிரட்டியுள்ளனர்.மேலும் நீங்கள் முதல் முறையாக இந்த குற்றத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்காமல் அபராதம் மட்டும்விதிக்கிறோம் என கூறி ஆனந்திடம் 20 ஆயிரம் ரூபாயை அபராத தொகையாக

வசூலித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.இதனையடுத்து கடை உரிமையாளர் ஆனந்த் இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் இரண்டு மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் துறையூரை சேர்ந்த பாலசந்திரன், பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், மேல கண்ணுக்குளம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மூவரும் திட்டமிட்டு கடை உரிமையாளரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.

இதில் பாலசந்திரன், வெங்கடாசலத்தை போலீசார் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கோயமுத்தூரில் வேலை பார்த்து வரும் விஸ்வநாதன் என்பவர் அவ்வப்போது திருச்சிக்கு வந்து பாலச்சந்திரனுடன் இணைந்து தங்களை அரசு அதிகாரிகள் என கூறி பல இடங்களில் பல்வேறு வழிகளில் பலரிடமும் மிரட்டி பணம் பறித்ததும் அதற்கு வெங்கடாசலத்தை இன்ஃபார்மராக பயன்படுத்தியதும் போலீசாருக்கு தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து விஸ்வநாதன் உள்ளிட்ட மூவர் மீது மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு

 செய்து பாலச்சந்திரன் வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவங்களுக்கு மூலையாகவும் தலைவனாகவும் செயல்பட்டு தலைமறைவாக உள்ள விஸ்வநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision