தி.மு.க கழக இளைஞர் ஆலோசனைக் கூட்டம்- துணை முதலமைச்சர் பங்கேற்பு

தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில துணைச்
செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பிரபு கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சியில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கு, அஞ்சலி!தீர்மானம் 2:வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!தீர்மானம் 3:கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் அரசியல் சக்திகளுக்குக் கண்டனம்!தீர்மானம் 4:பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு எதிராக, சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முதலமைச்சருக்குப் பாராட்டு.
தீர்மானம் 5:இந்திய ஒன்றியத்திலேயே `நம்பர்-1’ மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைத்து வரும் திராவிட மாடல் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி! தீர்மானம் 6:குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு!தீர்மானம் 7:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!தீர்மானம் 8:தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!தீர்மானம் 9:செம்மொழி நாள்!தீர்மானம்
10:ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனத்திற்குப் பாராட்டு! தீர்மானம் 11:234 தொகுதிகளிலும் கண்டன பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிர்வாகிகளுக்குப் பாராட்டுதீர்மானம் 12:தமிழர் நலன் காத்த முத்தமிழறிஞர் கலைஞரின் புகழைப் பரப்பும் வகையில் தெருமுனைக் கூட்டங்கள தீர்மானம் 13:களத்திற்கு நிகராக சமூக
வலைத்தளங்களிலும் களமாட உறுதியேற்போம்!தீர்மானம் 14:இளைஞர் அணியின் எதிர்கால பணிகளை விரைந்து மேற்கொள்வோம்! தீர்மானம் 15:எல்லார்க்கும் எல்லாம் தரும்திராவிட மாடல் அரசு, மீண்டும்ஆட்சிக்கட்டிலில் அமர உறுதியேற்போம்!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision